குழந்தைகள் உலகின் பிதாமகன் இதுவரை 85 ஆயிரம் சிறுவர்களுக்கு வாழ்வளித்தவர்
குழந்தைகள் உலகத்து பிதாமகனாக விளங்கிக்கொண்டிருக்கும் கைலாஷ் சத்யார்த்தி, தனது வாழ்க்கையையே அவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.
குழந்தைகள் உலகத்து பிதாமகனாக விளங்கிக்கொண்டிருக்கும் கைலாஷ் சத்யார்த்தி, தனது வாழ்க்கையையே அவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகளின் பிரச்சினைகள் அவரது மனதைத் தொட்டு, கருணையை உருவாக்கியதுதான் அதற்கு காரணம்.
‘‘வட இந்தியாவில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில் செங்கல்சூளை ஒன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கே 27 குடும்பத்தினர் அடிமைகளாக இருந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அங்கேயே குடும்பம் நடத்தி, குழந்தைகளும் பெற்றுக்கொண்டார்கள். செங்கல்சூளையிலே பிறந்த குழந்தைகளுக்கு அதுவே உலகமாகிவிட்டது. வெளி உலகமே அவர்களுக்குத் தெரியவில்லை. கல்வியும் தெரியாது. கல்விக்கூடமும் அவர்களுக்குத் தெரியாது. அடிமைப்பட்டுக் கிடந்த பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளும் அடிமையாகவே கருதப்பட்டனர். அவர்களும் குழந்தைப் பருவத்தில் இருந்தே சூளையில் வேலைபார்த்தார்கள். தினமும் 16 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தார்கள்.
நாங்கள் அவர்களை கண்டுபிடித்து மீட்க முயற்சித்தோம். அவர்களிடம் சென்று, ‘உங்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. உங்களை விடுதலை செய்யப்போகிறார்கள்’ என்று சொன்னபோது, எதுவும் புரியாமல் எங்களை ஒருமாதிரியாக பார்த்தார்கள். அவர்களுக்கு விடுதலை, சுதந்திரம் என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரியவில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தோம்.
அதன் பிறகு அவர்களிடம், ‘உங்களுக்கு வயிறு நிறைய உணவும், போதுமான அளவு தண்ணீரும் தருகிறோம்’ என்று சொன்னதும் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. உடனே அவர்கள் படபடவென்று எங்கள் வண்டியில் ஏறினார்கள்’’ என்று கைலாஷ் சத்யார்த்தி சொல்லும்போது, கேட்கும் நமது கண்கள் கலங்கத்தான் செய்கின்றன.
தொடர்ந்து அந்த சம்பவத்தை பற்றி அவர் சொல்கிறார்..
‘‘எல்லா குழந்தைகளும் வண்டியில் ஏறிவிட, ஒரே ஒரு சிறுமி மட்டும் சுருண்டு கிடந்தாள். அழக்கூட சக்தியற்ற வளாக காணப்பட்டாள். ‘என்னை காப்பாற்றுங்கள்’ என்ற முனகல் மட்டும் அவளிடமிருந்து வந்துகொண்டிருந்தது. அவளது பெயர் குலோபோ. அவளை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றபோதும் அவளை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. அவள் தனது தாயின் வயிற்றில் இருந்தபோதும், பிறந்த பின்பும் அந்த செங்கல் சூளை புகையிலே கிடந்திருக்கிறாள். வருடக்கணக்கில் அந்த காற்றையே சுவாசித்ததால், சுவாச தொடர்புடைய நோய் கடுமையாக அவளை தாக்கிவிட்டது.
குலோபோவை பறிகொடுத்த அவளது தந்தை, ‘நான் எழுதப்படிக்கத் தெரியாதவனாக ஆகிவிட்டதால்தான் அடிமையாகி, என் மகளையும் இழந்துவிட்டேன்’ என்று கண்ணீர்விட்டார். 17 வருடங்களாக அவர் அந்த சூளையில் அடிமை வேலை பார்த்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும், சூளை உரிமையாளர் காட்டிய பேப்பர்களில் எல்லாம் கைநாட்டு போட்டிருக்கிறார். கல்வி இல்லாததால் அவர் வாழ்க்கை கண்ணீர் கதையாகிவிட்டது" என்கிறார், கைலாஷ் சத்யார்த்தி.
இப்படிப்பட்ட காயங்கள் உருவாக்கிய கருணைதான் அவரை குழந்தைகள் நலனில் அக்கறைகொள்ள வைத் திருக்கிறது.
அவரிடம், ‘உங்கள் குழந்தைப் பருவம் எப்படி இருந்தது?’ என்று கேட்டபோது, தனது பால்ய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
"மத்தியபிரதேசத்தில் உள்ள விதிஷா நகரத்தில், சாதாரண குடும்பத்தில் நான் பிறந்தேன். நான் கூச்ச சுபாவமுள்ள குழந்தையாக வளர்ந்தேன். எப்போதும் என் தாயார் சிரோன்ஜியின் முந்தானையை பற்றிப் பிடித்துக்கொண்டு நடக்கும் குழந்தையாகத்தான் நான் இருந்தேன். எனது தந்தை ராம்பிரசாத் சர்மா போலீஸ்காரராக பணியாற்றினார். அவர் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவராக இருந்தார்.
எங்கள் கிராமத்தில் ஒரு திருட்டு நடந்தது. என் தந்தை அதில் துப்பு துலக்கினார். உயர் அதிகாரிகள் ஒருசிலரும், அரசியல்வாதிகளும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல் படும்படி என் தந்தைக்கு அழுத்தம் கொடுத்தார்கள். அவர் மறுத்தார். அதன் விளைவாக சதித்திட்டம் தீட்டப்பட்டு என் தந்தை வேலையை இழந்தார்.
நாங்கள் ஐந்து பேர். எனக்கு மூன்று அண்ணன்களும், ஒரு தங்கையும் இருக்கிறார்கள். எங்கள் சிறு வயதுப் பருவத்திலே தந்தை இறந்துவிட்டதால் தாயார்தான் எங்களை வளர்த்தார். எங்கள் தாயார் கருணை நிறைந்தவர். எங்களுக்கு இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவுவார். விதிஷாவில் உள்ள அரசு பள்ளியில் நான் படித்தேன்.
நான் முதல் நாள் பள்ளிக்கு சென்றபோது நான் பார்த்த காட்சி என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்று நான் புத்தாடை அணிந்து, புதிய பேக்கையும் தூக்கிக்கொண்டு, என் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு பள்ளிக்கு நடந்து சென்றேன். என்னைப் போன்ற வயதில் ஒரு சிறுவன் சாலை ஓரத்தில் இருந்து செருப்பு தைத்துக்கொண்டிருந்தான். அதை பார்த்த நான் தந்தையிடம், ‘அவன் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை?’ என்று கேட்டேன். ‘அவன் தினமும் செருப்பு தைத்தால்தான் அவனுக்கு சோறு கிடைக்கும். பசி தீர்க்க வேலைக்கு வந்துவிட்டதால் அவனால் பள்ளிக்கு செல்லமுடியவில்லை’ என்றார். அது எனக்கு மிகுந்த மனக்காயத்தை ஏற்படுத்தியது. என்னோடு படித்த நண்பர்களும் 11 வயது ஆனதும், படிப்பை நிறுத்திக்கொண்டு வேலைக்கு சென்றுகொண்டிருந்தார்கள். அந்த சம்பவங்கள் எல்லாம் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் எண்ணத்தை எனக்குள்ளே உருவாக்கியது’’ என்கிறார், கைலாஷ் சத்யார்த்தி.
இவர் ஹாலு என்ற குழந்தை தொழிலாளியை தொழில் நிறுவனம் ஒன்றில் இருந்து மீட்டிருக்கிறார். அவன் 6 வயதில் சொந்த கிராமத்தில் இருந்து கடத்தப்பட்டு, அந்த தொழில் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளியாக்கப்பட்டிருக்கிறான். இவர், தான் மீட்கும் அனைத்து சிறுவர் களையும் முதல் வேலையாக பள்ளிகளுக்கு படிக்க அனுப்புவார். ஹாலு அதி புத்திசாலியாக இருந்ததால் நான்காம் வகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறான். அங்கு படிப்பில் முதல் மாணவனாகி, மற்ற சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு அறிவாற்றலுடன் திகழ்ந்திருக் கிறான்.
"அப்போது ஒருமுறை அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். நான் ஹாலுவையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். அப்போது அங்கு ஜனாதிபதியாக இருந்த பில்கிளிண்டன் புத்தகத்தை வெளியிட்டார். பின்பு அவரோடு பேசும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.
ஹாலு, பில் கிளிண்டனிடம், ‘நான் சந்தித்த தலைவர்களில் உலகிலே அதிக அதிகாரம் படைத்தவர் நீங்கள்தான். அதன் மூலம் என்னை போன்ற சிறுவர்களுக்கு உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும்?’ என்று கேட்டான். ‘எங்கள் அரசாங்கம் குழந்தைகளுக்காக பல்வேறு உதவிகளை செய்துகொண்டிருக்கிறது’ என்று அவர் பதிலளித்தார்.
உடனே ஹாலு, ‘நீங்கள் அமெரிக்காவுக்கு ஜனாதிபதியாக இருந்திருக்காவிட்டால் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்?’ என்று கேட்டான். அந்த கேள்வி அவரை பலவிதங்களில் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. விரைவாகவே அவர் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்படும் குழந்தைகளின் கல்விக்காகவும், உணவுக்காகவும் 6 மில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கினார். இப்போது அந்த தொகை மேலும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அப்போது, ‘உலகில் உயர்ந்த பதவியில் இருப்பவரை சாதாரண ஒரு ஏழைச் சிறுவனின் கேள்வி எப்படி எல்லாம் செயல்படவைத்தது’ என்ற கோணத்தில் செய்திகள் வெளியாகின. இப்படி சிறுவர்களாலும் பெரிய காரியங்களை செய்யமுடியும்" என்று கூறி, சிலிர்க்கவைக்கிறார், சத்யார்த்தி.
நோபல் பரிசு கிடைத்த பின்பு இவரது செயல்பாடுகள் உலக அளவில் மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
‘‘நோபல் பரிசு கிடைப்பதற்கு முன்பு என் செயல்பாடுகளை பற்றி நான் விளக்கமாக கூறவேண்டியதிருந்தது. இப்போது அந்த நிலை மாறிவிட்டது. அமெரிக்க ஜனாதிபதி, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், பல்வேறு நாட்டு பிரதமர்களிடம் எங்கள் செயல்பாடுகளை பற்றி பேச முடிந்தது. நான் வெகுகாலமாக குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தேன். அந்த மாற்றத்தையும் இந்திய அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது’’ என்கிறார்.
கைலாஷ் சத்யார்த்தி என்ஜினீயரிங் படித்துவிட்டு, ஒரு வருடம் ஆசிரியராக பணியாற்றினார். பின்பு அந்த வேலையை விட்டுவிட்டு குழந்தைகளின் நலனுக்காக பாடுபடத் தொடங்கினார். அப்போது இவரது தாயார் மிகுந்த மனவருத்தத்தோடு அழுதிருக்கிறார். ஆனாலும் தனது கொள்கையிலும், செயல்பாட்டிலும் உறுதியாக இருந்த கைலாஷ் சத்யார்த்தி 30 வருடங்களாக இந்தியா முழுவதும் இருந்து 85 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்களை மீட்டிருக்கிறார். இவரது செயல்பாடுகளுக்கு மனைவி சுமேதா, மகன், மகள், மருமகள், மருமகன் ஆகியோரும் துணையாக இருக்கிறார்கள்.

Related Tags :
Next Story