கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள்– சீர்மரபினர் போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள்– சீர்மரபினர் போராட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2017 3:15 AM IST (Updated: 5 Dec 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், சீர்மரபினர் போராட்டம் நடத்தினர்.

மதுரை,

தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 10–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மூன்று சக்கர வாகனங்களில் கலெக்டர்அலுவலகத்திற்கு வந்தார்கள். அவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகையை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான அதிகாரிகள் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் சீர்மரபினர் நலசங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 25–க்கும் மேற்பட்டோர் நேற்று அங்கு வந்தார்கள். அவர்களில் பெண்கள் தலையில் முக்காடு போட்டு வாக்காளர் அடையாள அட்டைகளை கீழே போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரி போராட்டம் நடத்திய அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி குணாளனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து சென்றனர்.

மதுரையை அடுத்த தனக்கன்குளம் பகுதியில் உள்ள பெரியபரம்பூர் மலையில் உள்ள கல்குவாரியை மூடகோரி அந்த பகுதியை சேர்ந்த சிலரும், அண்ணாநகர் இந்திராநகரில் வசிக்கும் சிலர் தங்கள் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கக் கோரியும் கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்து சென்றனர்.


Next Story