ஓமலூரில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஓமலூர் உட்கோட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் 100–க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
ஓமலூர்,
ஓமலூர் உட்கோட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் 100–க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்க உட்கோட்ட தலைவர் முனிசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன், கோட்ட தலைவர் தங்கராஜ், செயலாளர் கலைவாணன் அந்தோணி, சேலம் கோட்ட செயலாளர் அன்பழகன், மாநில துணைத்தலைவர் சிங்கராயன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
போராட்டத்தின் போது, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தை மாத இறுதிக்குள் வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும், நீதிமன்ற உத்தரவுப்படி வேலைநிறுத்த நாட்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.