பாபர்மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூர் மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று(புதன்கிழமை) திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பூர்,
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று(புதன்கிழமை) திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகியவற்றில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுபோல் கோவில்கள், பள்ளிவாசல்களுக்கு முன்பும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடமைகளை போலீசார் வெடிகுண்டு கண்டறியும் கருவியைக்கொண்டு சோதனை நடத்திய பின் அனுமதித்தனர். இன்று இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடக்கிறது. இதற்காக ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடக்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. மாநகர் முழுவதும் 400–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.