நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கும்பகோணத்தில் போக்குவரத்துக்கழக அலுவலகம் முற்றுகை


நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கும்பகோணத்தில் போக்குவரத்துக்கழக அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 6 Dec 2017 4:15 AM IST (Updated: 6 Dec 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கும்பகோணம் போக்குவரத்துக்கழக அலுவலகத்தை தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தை தொழிலாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கழக நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கும்பகோணம், திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கூட்டமைப்பின் துணை பொதுச் செயலாளர் சிவானந்தம் தலைமை தாங்கினார். முன்னாள் துணை தலைவர் மனோகரன், போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பொறையாறில் போக்கு வரத்துக்கழக பணிமனை இடிந்து விழுந்து தொழிலாளர்கள் பலியான சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து நிர்வாக இயக்குனரை கைது செய்ய வேண்டும், நீதிமன்ற தீர்ப்புகளை மதித்து அமல்படுத்த வேண்டும், ஊழலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் நிர்வாகிகள் மணிமாறன், பாலசுப்பிரமணியன், சிவக்குமார், விரைவு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சங்க துணை தலைவர் கண்ணன், கும்பகோணம் மண்டல தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story