மின்சாரம்–குடிநீர் வழங்கக்கோரி தொடரும் போராட்டம்: பல இடங்களில் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
குமரி மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கக்கோரி நேற்றும் பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தை தாக்கிய ‘ஒகி‘ புயல் பல்லாயிரக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகிறார்கள். பல இடங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நாகர்கோவில் செட்டித்தெரு அருகே உள்ள செங்கல்மடத்தெரு பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் நேற்று பிற்பகல் சுமார் 2 மணி அளவில் கோட்டார் சவேரியார் பேராலய சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்புக்கு செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 நாட்களாக மின்சாரம் இன்றியும், குடிநீர் இன்றியும் தவித்து வரும் தங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் மரக்கிளைகளை சாலையின் குறுக்கே போட்டிருந்தனர்.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கேப் ரோடு, பீச்ரோடு, இந்துக்கல்லூரி ரோடு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை ஆகியவற்றிலும் வாகனங்கள் அங்குமிங்கும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றன. இதுபற்றிய தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர்கள் அன்பு பிரகாஷ், பென்சாம் உள்ளிட்ட போலீசாரும், மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டம் நடத்தியவர்கள், நாங்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்றும் (அதாவது நேற்று முன்தினம்) போராட்டம் நடத்தினோம். இன்று இரவு மின்சாரம் வந்துவிடும் என்று கூறிச்சென்றீர்கள். ஆனால் சொன்னபடி மின்சாரம் வரவில்லை. அதனால் தான் இன்றும் (நேற்று) போராட்டம் நடத்துகிறோம். ஆனால் இன்று நீங்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் செய்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். அதற்கு மின் வாரிய அதிகாரிகள், இன்று (நேற்று) மாலை 6.30 மணிக்குள் உங்கள் பகுதிக்கு உறுதியாக மின்சாரம் வழங்கப்படும். அதுவரை மின்வாரிய அதிகாரி இங்கேயே இருந்து அதற்கான பணிகளை கவனிப்பார். எனவே நீங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்றனர்.
இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாகவும், மாலை 6.30 மணிக்குள் மின்சாரம் வழங்கப்படவில்லை என்றால் மெழுகுவர்த்தி ஏந்தி இதே சாலையில் மீண்டும் மறியல் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபோல், நாகர்கோவில் நகராட்சி 20–வது வார்டுக்கு உட்பட்ட பறக்கை காந்திபுரம் கலைமகள் தெரு பொதுமக்கள் மின்சாரம், குடிநீர் கேட்டு நேற்று போராட்டத்தில் குதித்தனர். அந்த தெருவை சேர்ந்த ஏராளமானவர்கள் பறக்கை–மணக்குடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர், மின்சாரம் வழங்க கேட்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த வழியாக பஸ்கள் மற்றும் எந்த வாகனங்களும் செல்லமுடியாத நிலை உருவானது. அந்த பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நின்றன.
பொதுமக்களின் போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, சீரமைப்பு பணிகள் உடனே தொடங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன், மின்வாரிய ஊழியர்கள் சென்று சீரமைப்பு பணியை தொடங்கினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் ராஜாவூர் பகுதியில் இதுவரை மின்சாரம், குடிநீர் வழங்கப்படவில்லை. இதையடுத்து நேற்று காலை ராஜாவூர் சந்திப்பில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மருங்கூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் கிளாட்சன் தலைமையில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் காலிக்குடங்களுடன் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், மின்சாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மின்சாரம், குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி கூறப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் கருங்கல் உள்ளிட்ட பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Related Tags :
Next Story