தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஏரிகளையும் தூர்வாரக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரி சீரமைக்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரதாபன், ஒன்றிய செயலாளர்கள் பச்சாகவுண்டர், மாதையன், நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜகோபால், ராமச்சந்திரன், உதயகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், ராமலிங்கம், சண்முகம், வேடியப்பன், புகழேந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள தின ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இந்த திட்டத்தை ஆண்டுக்கு 200 நாட்களுக்கு விரிவுபடுத்தி நாளொன்றுக்கு ரூ.400 ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரி சீரமைக்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வாங்கி வளர்க்க கூட்டுறவு வங்கிகள், ஊரகவளர்ச்சி வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனுதவி வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள மேய்ச்சல் நிலங்களை முறையாக கணக்கெடுப்பு செய்து அவற்றை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டவிதியின்படி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை உடனடியாக கோவில் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்க மாவட்ட அளவில் தனி கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story