பாபர் மசூதி இடிப்பை கண்டித்து நாமக்கல்லில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பை கண்டித்து நேற்று நாமக்கல்லில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் அண்ணாசிலை முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். இதில் மாநில பேச்சாளர் ஷானவாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பாபர் மசூதியை மீண்டும் அங்கு கட்ட வேண்டும், மசூதியை இடித்த நபர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் அப்துல் ரகுமான், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அப்துல் ரஹீம், அலாவுதீன், ஷேக் நஜீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாமக்கல் பூங்கா சாலையில் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்புகுழு தலைவர் பாஷா தலைமை தாங்கினார். சுல்தான் பாஷா வரவேற்று பேசினார். இதில் மனிதவள மேம்பாட்டு அணி மாநில செயலாளர் ஹூசைன், சமூகநீதி மாணவர் இயக்க மாநில துணை செயலாளர் பாரூக் அராபத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
இதில் கருப்பு சட்டை அணிந்து ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதேபோல் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை கண்டித்து நாமக்கல் ரெயில் நிலையம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சையத் அகமத் கபீர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஷேக் நிஜாம், துணை செயலாளர்கள் லுக்மான் அலி, நூருல் அமீன், ஜீலான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் சிக்கந்தர் அமீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத், கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட செயலாளர் கவுரிசங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முகமது முபீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story