பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 7 Dec 2017 4:15 AM IST (Updated: 7 Dec 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு, அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர்,

இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தந்தை, சட்ட மேதை என போற்றப்படும் டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று அனு சரிக்கப்பட்டது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூர் சங்குபேட்டையிலிருந்து கட்சி யினர் ஊர்வலமாக சென்றனர். கடைவீதிவழியாக சென்று பழைய பஸ்நிலையத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. மேலும் அம்பேத்கர் வரையறை செய்த சட்டத்தை நாம் கடைபிடித்து அதன்படி நடப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை. எனவே சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப சாதி-மத வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையுடனும், சமூக அக்கறையுடனும் வாழ வேண்டும் என்பதை ஊர்வலத்தின் போது கட்சி யினர் வலியுறுத்தினர்.

பின்னர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் மாநில செயலாளர் வீரசெங்கோலன், நெறியாளர் திருமாறன் உள்பட நிர்வாகிகள் பெரம்பலூர் பழைய பஸ்நிலையத்தில் உள்ள அம்பேத் கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசியல் கட்சியினர் மரியாதை

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன் தலைமையில், கட்சியினர் பெரம்பலூர் பழைய பஸ்நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் கட்சியினர் அம்பேத் கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரம்பலூர் மாவட்ட மத்திய, மாநில எஸ்.சி.-எஸ்.டி. அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில், பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் லோகநாதன் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட துணைத்தலைவர் முத்துக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் பார்த்திபன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார். 

Next Story