மணல் அள்ள அனுமதி கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
மணல் அள்ள அனுமதி கோரி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 758 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் அள்ள மதுரை ஐகோர்ட்டு தடைவிதித்துள்ளது. அமராவதி ஆற்றில் மாட்டுவண்டியில் தொழிலாளர்கள் மணல் அள்ளி விற்று வந்தனர். மாட்டுவண்டியில் மணல் எடுத்து அதனை லாரிகளுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனால் அமராவதி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
இந்த நிலையில் அமராவதி, காவிரி ஆறுகளில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என மாட்டுவண்டி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்திலும், குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் மனு கொடுத்தனர். மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என கரூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்த நிலையில் அறிவித்தபடி போராட்டம் நடத்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். மேலும் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பகுதியில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கவேல் தொடங்கி வைத்து பேசினார். மாநில பொதுச் செயலாளர் குமார், மாநிலக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும், அவர்களது குழந்தைகளும், கட்டிட தொழிலாளர்களும், சி.ஐ.டி.யூ. சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். மாட்டு வண்டி தொழிலாளர்களின் போராட்டத்தையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அனைவரையும் போலீசார் கைது செய்ய தயாராகினர். அப்போது மாட்டு வண்டி தொழிலாளர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பசுபதிபாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.
இதைதொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வேன் மற்றும் அரசு பஸ்களில் ஏற்றினர். பெண் தொழிலாளர்களையும், அவர்களது குழந்தைகளையும் வேனில் ஏற்றிச்சென்றனர்.
64 பெண்கள் உள்பட மொத்தம் 758 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் தாந்தோன்றிமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
போராட்ட நிர்வாகிகள் கூறுகையில், “ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் அள்ள தடைவிதிக்கப்படவில்லை. மாட்டுவண்டியில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு தீவனம் வாங்கி போட முடியவில்லை. இதனால் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க கோரி சென்னையில் தமிழக அரசின் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளோம். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர். மாட்டு வண்டி தொழிலாளர்களின் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story