பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி த.மு.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி த.மு.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு த.மு.மு.க. சார்பில் நேற்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பஜ்லுல்ஹக் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன், நகர செயலாளர் பிரகாஷ், நகரசபை துணைத்தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர் தேவா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் மாவட்ட குழு உறுப்பினர் மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பழனிவேல், ம.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும். பள்ளிவாசல் இடப்பிரச்சினையில் ஆவணங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் முகமதுயூசுப், மாவட்ட துணை செயலாளர்கள் யூசுப், பகுருதீன், ஹாஜாநஜ்புதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் த.மு.மு.க. நகர செயலாளர் அப்துல்காதர் நன்றி கூறினார்.
இதேபோல திருவாரூர் பஸ் நிலையம் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லத்தீப் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக்தாவூது, மாவட்ட துணைத்தலைவர் அஹமதுமைதீன், மாவட்ட செயலாளர் அப்துல்ராஜிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல் ஷபியா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொருளாளர் முகமதுசுல்தான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தப்ரேஆலம், ஜெயினுலாபுதீன், தமிம்அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிஜெகபர் சாதிக் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை செயலாளர்கள் அனீஸ், தாஜிதீன், தலைமை பேச்சாளர் விடுதலைவேந்தன், திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் காளிதாசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது வரவேற்றார். முடிவில் மாவட்ட துணை செயலாளர் லியாகத்அலி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story