கொடிநாள் நிதி வசூல் விழாவில் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
கரூரில் நடைபெற்ற கொடிநாள் நிதி வசூல் விழாவில் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வழங்கினார்.
கரூர்,
கரூரில் நடைபெற்ற கொடிநாள் நிதி வசூல் விழாவில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கொடிநாள் நிதி வசூலையும், முன்னாள் படைவீரர் நலன் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 905 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
முப்படைகளிலும் பணியாற்றி தன்னலமற்ற சேவை புரிந்து தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ந் தேதி படைவீரர் கொடிநாளாக அரசால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் கொடிநாள் நிதி வசூல் தொடங்கப்பட்டு அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு எய்தப்படுகிறது. கடந்த ஆண்டு நம் (கரூர்) மாவட்டத்திற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.54 லட்சத்து 65 ஆயிரம் எய்தப்பட்டுள்ளது.
பதிவு
நடப்பாண்டிற்கு ரூ.60 லட்சத்து 12 ஆயிரத்து 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் மட்டும் திருமண நிதி, மனநலம் குன்றிய சிரார்களுக்கான நிதி உதவி என 74 முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கு ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தொகுப்பு நிதியாக வங்கிக்கடன் வட்டி மான்யம் என 14 முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.98 ஆயிரமும், பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகையாக 12 மாணவ- மாணவிகளுக்கு ரூ.3 லட்சத்து 21 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வேலைவாய்ப்பிற்காக 85 முன்னாள் படைவீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
பயன்பெற வேண்டும்
இதில் 4 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிட அரசு தயாராக உள்ளது. இந்த வாய்பை பயன்படுத்தி கரூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்கள் குறைகள் தேவைகளை மனுக்களாக வழங்கி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜ்மோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) சாந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வசந்தாகுமாரி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், முன்னாள் படைவீரர் நலன் அலுவலர்கள் வீரபத்திரன், சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story