தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்று மாலை நடைபெற்றது. சூளகிரியில் உள்ள ஒன்றிய ஐ.சி.டி.எஸ். அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் தேவராஜ், ஒன்றிய தலைவி பூலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இதில், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், மே மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரையில் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஊதியக்குழு ஏமாற்றத்தை வலியுறுத்தி ஒன்றிய அளவில் முதல்-அமைச்சரின் கவனஈர்ப்பு மாலை நேர போராட்டம் ஊத்தங்கரை ஒன்றிய ஐ.சி.டி.எஸ். அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க ஒன்றிய செயலாளர் சுஜாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத்தலைவர் ராஜம்மாள் தலைமை தாங்கினார். ஆதிபராசக்தி, கனகா, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் காவேரி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்டத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் லில்லிபுஷ்பம் நன்றி கூறினார்.
இதே போல காரிமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கலாவதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜோஸ் முன்னிலை வகித்தார். முன்னதாக துர்காதேவி வரவேற்றார். இதில், பாரதி, ஈஸ்வரி, மலர்கொடி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினார்கள்.
இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும்் உதவியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். முடிவில் திலகம் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story