திருச்செங்கோட்டில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று மாலை அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 35 ஆண்டுகள் பணிபுரிந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், 7-வது ஊழியக்குழுவில் அறிவித்த 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பி.கண்ணகி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் ஏ.பாலசுப்பிரமணியம் தொடக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் பாண்டிமாதேவி பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் எஸ்.கதிர்வேல், வட்ட பொருளாளர் டி.தனசேகரன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க கே.சங்கர், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு எம்.கணேசபாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.எஸ்.இளங்கோவன் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கே.தமிழரசி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story