விவசாயிகளுக்கு ஆதரவான யஷ்வந்த் சின்காவின் போராட்டம், மராட்டிய அரசுக்கு எச்சரிக்கை மணி
‘‘விவசாயிகளுக்கு ஆதரவான யஷ்வந்த் சின்காவின் போராட்டம் மராட்டிய அரசுக்கு எச்சரிக்கை மணி’’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
மும்பை,
‘‘விவசாயிகளுக்கு ஆதரவான யஷ்வந்த் சின்காவின் போராட்டம் மராட்டிய அரசுக்கு எச்சரிக்கை மணி’’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
யஷ்வந்த் சின்காவிவசாய பம்பு செட்டுகளுக்கு தடையில்லா மின்சாரம், பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாரதீய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான யஷ்வந்த் சின்கா, அகோலா போலீஸ் மைதானத்தில் 3 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து, 80 வயது யஷ்வந்த் சின்கா போராட்டத்தை வாபஸ் பெற்றார். இந்த நிலையில், நேற்று யஷ்வந்த் சின்காவின் போராட்டத்தை மேற்கோள்காட்டி, சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கம் வெளியானது. அதில் கூறி இருப்பதாவது:–
எச்சரிக்கை மணியஷ்வந்த் சின்காவின் போராட்டத்தை நாட்டின் முக்கிய தலைவர்கள் ஆதரித்தனர். நாங்களும் (உத்தவ் தாக்கரே) அவருடன் தொலைபேசியில் பேசினோம். விவசாயிகளின் வாழ்வா? சாவா? என்பது தான் இப்போதைய கேள்வி. ஆகையால், ஆட்சிக்கு என்ன நேரிடும் என்பது பற்றி கவலைப்படாமல், யஷ்வந்த் சின்காவின் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்தோம்.
யஷ்வந்த் சின்கா ஒன்றும் மக்கள் செல்வாக்குமிக்க தலைவர் இல்லை. அவர் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். ஆயினும், அவரது போராட்டத்துக்கு விவசாயிகள் ஆதரவு தெரிவித்ததால், அது பாரதீய ஜனதாவுக்கும், மராட்டிய அரசுக்குமான எச்சரிக்கை மணி. அகோலா விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றட்டும்.
உத்தவ் தாக்கரே அழுத்தம்உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சி கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தான் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது. பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே, அதற்கான புகழை சம்பாதிக்க, விளம்பரத்துக்காக கோடிக்கணக்கான ரூபாயை மாநில அரசு செலவிட்டது. ராமர் கோவில் விவகாரம் போல், பயிர்க்கடன் தள்ளுபடி திட்டமும் அறிவிப்போடு சிக்கிக் கொண்டது.
யஷ்வந்த் சின்கா தன்னுடைய சொந்த கட்சி தலைவர்கள் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டால் என்றால், அகோலாவில் மகத்தான வரவேற்பை அவர் எப்படி பெற முடியும்? மேலும், போராட்டத்தை கைவிடுமாறு முதல்–மந்திரியும், வருவாய் மந்திரியும் அவரிடம் கெஞ்சியது ஏன்? ஏனென்றால், அவரது போராட்டம் அசிங்கமாக மாறி, வர இருக்கும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை பாதிக்கும் என்பதற்காக தான்.
இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.