உறுப்பினர்களின் எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்த முடிவு சாரண–சாரணியர் இயக்கத்தில் சேர மாணவர்கள் முன்வர வேண்டும்
கர்நாடகத்தில் சாரண–சாரணியர் இயக்கத்தில் சேர மாணவர்கள் முன்வர வேண்டும் என்றும், உறுப்பினர்களின் எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்த முடிவு செய்து வருவதாகவும் மாநில தலைமை கமிஷனர் பி.ஜி.ஆர்.சிந்தியா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் சாரண–சாரணியர் இயக்கத்தில் சேர மாணவர்கள் முன்வர வேண்டும் என்றும், உறுப்பினர்களின் எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்த முடிவு செய்து வருவதாகவும் மாநில தலைமை கமிஷனர் பி.ஜி.ஆர்.சிந்தியா கூறினார்.
நூற்றாண்டு நிறைவு விழாபாரத சாரண–சாரணியர் அமைப்பின் கர்நாடக மாநில தலைமை கமிஷனர் பி.ஜி.ஆர்.சிந்தியா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பாரத சாரண–சாரணியர் இயக்கத்தின் கர்நாடக மாநில தலைமை கமிஷனராக பணியாற்றிய கொண்டச்சி பசப்பாவின் நூற்றாண்டு நிறைவு விழா வருகிற 11–ந் தேதி (திங்கட்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது. இவர் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மத்திய மந்திரியாகவும், கர்நாடக முதல்–மந்திரியாக இருந்த நிஜலிங்கப்பாவின் மந்திரிசபையில் மந்திரியாகவும் பணியாற்றிவர்.
10 லட்சமாக உயர்த்த முடிவுஇதையொட்டி வருகிற 10–ந் தேதி பெங்களூருவில் பாட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். நூற்றாண்டு நிறைவு விழாவில் சாரண–சாரணியர் இயக்கத்தில் இருப்பவர்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படும். கர்நாடகத்தில் இந்த சாரண–சாரணியர் இயக்கத்தில் 4 லட்சம் மாணவ–மாணவிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்த முடிவு செய்து, நாங்கள் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டில் அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாணவ–மாணவிகள் இந்த சாரண–சாரணியர் இயக்கத்தில் சேர வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது. அதே போல் கர்நாடகத்திலும் மாணவ–மாணவிகள் இந்த இயக்கத்தில் கட்டாயம் சேர உத்தரவு பிறப்பிக்குமாறு கர்நாடக அரசிடம் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு இதுபற்றி ஆலோசனை நடத்தி வருகிறது.
முன்வர வேண்டும்முதல்கட்டமாக 2 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இதை அமல்படுத்தி அது வெற்றி பெற்றால் மாநிலம் முழுவதும் அதை விஸ்தரிக்கலாம் என்று அரசு ஆலோசிக்கிறது. கர்நாடக அரசு மாணவ–மாணவிகள், சாரணயர் இயக்கத்தில் சேருவதை கட்டாயப்படுத்த வேண்டும். இதில் சேர மாணவ–மாணவிகள் முன்வர வேண்டும். அரசு இதை விரைவாக செய்து முடிக்க வேண்டும்.
இந்த இயக்கத்தில் மாணவர்கள் தாமாக முன்வந்து சேருவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்த ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதில் உறுப்பினராக சேர்ந்து சேவையாற்ற மாணவர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு பி.ஜி.ஆர்.சிந்தியா கூறினார்.