பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாட்டுங்கா–தானேமத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள மாட்டுங்கா–தானே இடையே ஸ்லோ வழித்தடத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல் மாலை 4.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.57 மணி முதல் மாலை 4.20 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் மாட்டுங்கா–தானே இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் வித்யவிகார், காஞ்சூர்மார்க், நாகுர் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது. பயணிகள் இந்த 3 ரெயில் நிலையங்களுக்கும் சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் ஸ்லோ ரெயில்களில் செல்லலாம்.
ரெயில்சேவை ரத்துதுறைமுக வழித்தடத்தில் குர்லா–வாஷி இடையே காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.39 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷிக்கும், காலை 10.21 மணி முதல் பிற்பகல் 3.41 மணி முதல் வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் இடையே ரெயில் சேவை இருக்காது. எனினும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் சி.எஸ்.எம்.டி. – குர்லா, வாஷி – பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது. மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் நாளை பகல் வழக்கம் போல ரெயில்கள் இயக்கப்படும்.