பெண்ணை எரித்து கொன்ற வாலிபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு
ஆதம்பாக்கத்தில் பெண்ணை எரித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் 7–வது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவர் கனடாவில் கம்ப்யூட்டர் என்ஜீனியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (வயது 45), மகள்கள் இந்துஜா (22), நிவேதா(20) மற்றும் பிளஸ்–1 படிக்கும் 16 வயது மகன் ஆகியோர் ஆதம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். இந்துஜா வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும்போது வேளச்சேரியை சேர்ந்த ஆகாஷ்(22) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் ஆகாஷ் கடந்த 13–ந்தேதி இரவு இந்துஜா வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்ய வேண்டும் என கூறினார். இதற்கு இந்துஜா மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆகாஷ் தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி அவரை எரித்து கொலை செய்தார். மகளை காப்பாற்ற சென்று தீயில் காயமடைந்த ரேணுகாவும் உயிரிழந்தார்.
குண்டர் சட்டத்தில்...
இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் ஆகாசை ஓராண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடவேண்டும் என ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், ஆகாசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story