கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டபோது மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி
தொப்பூர் அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டபோது மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள கணபதியூரை சேர்ந்தவர் நடராஜன், விவசாயி. இவர் தனக்கு சொந்தமான கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இந்த பணியில் கம்மம்பட்டி அருகே உள்ள சாவடியூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த மாதப்பன் (வயது65), மணியக்காரனூரை சேர்ந்த மற்றொரு மாதப்பன் (55), மலையனூரை சேர்ந்த மீனு முத்து(50), குரங்குப்பள்ளம் கிராமத்தை முத்து (55) ஆகிய 4 பேரும் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று தொழிலாளர்கள் உள்ளே இறங்கி கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கிணற்றின் மேல் பகுதியில் இருந்து திடீரென மண் சரிந்து உள்ளே விழுந்தது. இதில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட 4 பேரையும் மண் அமுக்கியது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், மண்ணில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.
இதில் மாதப்பன், மற்றொரு மாதப்பன் ஆகிய 2 பேரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மீனு முத்து, முத்து ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டனர். அப்போது அங்கு திரண்டு இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். பின்னர் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story