செய்யாறு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
செய்யாறு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
செய்யாறு,
செய்யாறு டவுன் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் ஹேமலதா (வயது 20), அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வருகிறார். பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ராஜேஷ் (25), எலக்ட்ரீசியன்.
ராஜேசும், ஹேமலதாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு ஹேமலதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 5–ந் தேதி வள்ளிமலை முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு செய்யாறு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
Related Tags :
Next Story