கர்ப்பிணி தற்கொலை வழக்கில் கணவர் கைது
கர்ப்பிணி தற்கொலை வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
சோமரசம்பேட்டை,
திருச்சியை அடுத்த சத்திரப்பட்டி அருகே உள்ள இனாம்மாத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் ஞானவேல்(வயது30). எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஐஸ்வர்யா(வயது 21). கர்ப்பமாக இருந்தார். செல்போனில் வேறு யாருடனோ பேசியது சம்பந்தமாக கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஐஸ்வர்யா கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து ஞானவேல் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி ஐஸ்வர்யாவின் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியதன்பேரில் ஐஸ்வர்யாவின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.
இதுகுறித்து ஐஸ்வர்யாவின் அண்ணன் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் பொன்.ராமர், போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமதுஇத்ரீஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஞானவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story