சேலத்தில் மாணவர்கள், இளைஞர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் மாணவர்கள், இளைஞர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2017 4:15 AM IST (Updated: 11 Dec 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மாணவர்கள், இளைஞர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சேலம்,

சேலம் மாவட்ட அனைத்து மாணவர்கள், இளைஞர் அமைப்பினர் மற்றும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அமைப்பு சார்பில் சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இயற்கை பாதுகாப்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேஷ், சமூக நிதி மாணவர் இயக்கத்தை சேர்ந்த அஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காணாமல் போன மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பார்த்தீபன், சமூக அறிவியல் கல்வி இயக்கத்தை சேர்ந்த ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story