நெல்லையில் அருந்ததி பெண்கள் எழுச்சி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கந்து வட்டி சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி நெல்லையில் அருந்ததி பெண்கள் எழுச்சி இயக்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை,
அருந்ததி பெண்கள் எழுச்சி இயக்கம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலித் பெண்கள் எழுச்சி இயக்க மாநில அமைப்பாளர் வேலம்மாள் தலைமை தாங்கினார்.
மாரியம்மாள், கவிதா, ஜெயா, சின்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்திந்திய மாதர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் கற்பகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
கந்து வட்டி தொழிலை குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். கந்து வட்டி தொடர்பாக போலீஸ் நிலையங்களில் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்து வட்டி கொடுமைகளை அறிய மாவட்டம், தாலுகா அளவில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும். போலீசார் எடுக்கும் நடவடிக்கை குறித்து கண்காணிப்பு குழுவிடம் தெரிவிக்க வேண்டும். கந்து வட்டி சட்டத்தை முழுமையா அமல்படுத்த வேண்டும்.
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானவர்கள் புகார் மனு கொடுக்க தயங்குகிறார்கள்.
அவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் நம்பிக்கையூட்டி புகார் மனுக்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த சந்திரா, தங்கம், சத்தியகலா, சுப்புலட்சுமி, பரமேசுவரி, முருகம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story