வணிக உதவியாளர் கைதை கண்டித்து மின்வாரிய பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


வணிக உதவியாளர் கைதை கண்டித்து மின்வாரிய பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2017 4:15 AM IST (Updated: 12 Dec 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் வணிக உதவியாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மின்வாரிய பணியாளர்கள் விடுப்பு எடுத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் நேற்று போராட்டத்தில் ஈடு பட்டனர்.

மேட்டூர்,

மேட்டூர் துணை கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணியாற்றி வருபவர் செந்தில் குமார். இவர் கடந்த 7-ந் தேதி, சப்-இன்ஸ்பெக்டர் மலர் விழியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை வாபஸ் பெறக்கோரியும், செந்தில்குமாரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், மேட்டூர் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர் ஆகிய கோட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

மேலும் அவர்கள் மேட்டூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான தொழிற்சங்க பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து அவர் கள் தர்ணா போராட்டத் திலும் ஈடுபட்டனர். 

Next Story