திருமாவளவன் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் பா.ஜனதா சார்பில் நடைபெற்றது


திருமாவளவன் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் பா.ஜனதா சார்பில் நடைபெற்றது
x
தினத்தந்தி 12 Dec 2017 4:15 AM IST (Updated: 12 Dec 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் திருமாவளவன் உருவபொம்மையை எரித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை,

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என கூறினார். அவருடைய இந்த பேச்சை கண்டித்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை மாவட்ட பா.ஜனதாவின் ஆதிராவிடர் அணி தலைவர் குபேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பா.ஜனதா தலைவர் இளங்கோ, மாவட்ட துணைத்தலைவர்கள் கோவிந்தராஜ், சூரைசண்முகம், பெரியநாயகி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் கர்ணன், உமாபதி, மாவட்ட செயலாளர்கள் பிரபு, துரைராஜ், சதீஷ், ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ரெங்கராஜ், நகர தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உருவபொம்மை எரிப்பு

ஆர்ப்பாட்டத்தின்போது திருமாவளவனின் உருவ பொம்மையை எரித்து பா.ஜனதாவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். 

Next Story