கதிர்நாயக்கன்பாளையத்தில் வீடுகளின் சுற்றுச்சுவரை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம்
கதிர்நாயக்கன்பாளையத்தில் வீடுகளின் சுற்றுச்சுவரை இடித்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
துடியலூர்,
கோவை மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில், ஆனைக்கட்டி, பொன்னூத்து அம்மன் கோவில் ஆகிய வனப்பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சுற்றித்திரிகின்றன. அவை, அடிக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வீடுகள் மற்றும் விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பொன்னூத்து அம்மன் கோவில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் 7 காட்டுயானைகள் கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமிநகர் பகுதிக்குள் புகுந்தன. அந்த யானைகள் அங்குள்ள குப்பன் என்பவரது வீட்டின் மேற்கூரை ஓடுகளை உடைத்து சேதப் படுத்தின. மேலும் வீட்டில் இருந்த உணவுப்பொருட்களை வெளியே எடுத்து வீசியும், தின்றும் அட்டகாசம் செய்தன.
அதன்பிறகு அங்குள்ள நடராஜன், தர்மன் ஆகியோரது வீடுகளின் சுற்றுச்சுவரை காட்டு யானைகள் இடித்து தள்ளின. இதையடுத்து காட்டுயானைகள், சாலையை கடந்து தொப்பம்பட்டிக்குள் புகுந்தன. அங்கு வேணுகோபால் என்பவரது 5 ஏக்கர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் முறித்து நாசப்படுத்தின.
அங்கிருந்து கஸ்தூரிநாயக்கன்பாளையம் வழியாக பொன்னூத்து அம்மன் கோவில் வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் சென்றன. காட்டுயானைகள் அட்டகாசம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இது குறித்து வேணுகோபால் கூறுகையில், காட்டுயானைகள் அட்டகாசம் காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனது தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காட்டுயானைகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Tags :
Next Story