கொமந்தான் மேடு படுகை அணையை சீரமைக்கும் பணி தொடங்கியது


கொமந்தான் மேடு படுகை அணையை சீரமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 12 Dec 2017 3:55 AM IST (Updated: 12 Dec 2017 3:55 AM IST)
t-max-icont-min-icon

படுகை அணையை சீரமைக்கும் பணி தொடங்கியது

பாகூர்,

தொடர் மழையால் சேதம் அடைந்த கொம்பந்தான் மேடு படுகை அணையை சீரமைக்கும் பணி தொடங்கியது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவ மழையால் திருவண்ணாமலை அருகே உள்ள சாத்தனு£ர் அணை முழு கொள்ளவை எடடியது. இதனால் அந்த அணை முன்னறிப்பு எதுவும் இன்றி கடந்த வாரம் திறந்த விடப்பட்டது. தென்பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாகூர் அருகே உள்ள சித்தேரி அணைக்கட்டு மற்றும் கொமந்தான் மேடு ஆகிய பகுதியில் உள்ள படுகை அணையுடன் கூடிய தரைப்பாலமும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கொமந்தான்மேடு படுகை அணை சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து மண் மூட்டைகளாலும், செம்மண் மற்றும் சவுக்கு கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டது. மீண்டும் இந்த தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அங்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் புதுவை அரசு பொதுப்பணித்துறை சார்பில் நேற்று காலை கொம்பந்தான் மேடு படுகை அணையை சீரமைக்கும் பணி தொடங்கியது. பொக்லைன் எந்திர உதவியுடன் படுகை அணை சீரடைந்த பகுதியில் மணல் கொட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த பணிகளை விரைவாக முடிக்கும் படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.


Next Story