ஈரோட்டில் கூட்டுறவு சங்க நில மீட்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,
நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை தனியார் சிலருக்கு வழங்கப்பட்டதை கண்டித்தும், அந்த நிலத்தை மீட்டு சங்க உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க நில மீட்பு இயக்கம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் இயக்கம் சார்பில் ஈரோடு சூரம்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாட்டு மக்கள் இயக்க பொதுச்செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் வினோத், சின்னதம்பி, ரபீக்அகமது, நல்லு பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story