சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்


சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 14 Dec 2017 4:15 AM IST (Updated: 14 Dec 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

சேலம்,

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஊதிய குழுவில் விடுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், துணை டவர் நிறுவனம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் சேலத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக செவ்வாய்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் கூட்டமைப்பை சேர்ந்த பாலகுமார், மாதையன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். 

Next Story