விவசாயிகளுக்கு உதவ எனது ஆடம்பர காரை விற்பேன் நடிகர் சுதீப் அறிவிப்பு
விவசாயிகளுக்கு உதவ எனது ஆடம்பர காரை விற்பேன் என்று நடிகர் சுதீப் கூறினார்.
பெங்களூரு,
விவசாயிகளை நினைவில் வைத்துக்கொள்வது நமது கடமை. பணக்காரர்களை மட்டுமே மதிக்கும் இந்த சமுதாயத்தில் சோறு போடும் விவசாயிகளுக்கு உரிய மரியாதை செய்யும் மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இடைத்தரகர்களால் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். அவர்களின் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும்.
சமீபகாலமாக ஆடம்பர திருமணங்கள் நடைபெறுவது அதிகரித்துவிட்டது. நமது பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப திருமணங்களை நடத்த வேண்டும். தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டாம். விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற்று சரியான விளைச்சலை செய்ய வேண்டும். ஆடம்பர வாழ்க்கை வாழ்வது கூடாது.இவ்வாறு சந்தோஷ் ஹெக்டே பேசினார்.
நடிகர் சுதீப் பேசுகையில், “விவசாயிகளின் கஷ்டம் என்ன என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் படும் துன்பங்களை ஆழமாக தெரிந்து கொள்ளும் சக்தி எங்களுக்கு இல்லை. விவசாயிகளின் மதிப்பு என்ன என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். என்னிடம் ஒரு விலை உயர்ந்த கார் உள்ளது. விவசாயிகளுக்கு உதவ அதை நான் விற்பேன். அதில் கிடைக்கும் பணத்தை இந்த அறக்கட்டளைக்கு வழங்குவேன். என்னால் முடிந்த உதவியை செய்வேன்’’ என்றார்.
Related Tags :
Next Story