குரோம்பேட்டை அருகே ஏரியில் வாலிபர் சடலம்
குரோம்பேட்டை அருகே ஏரியில் வாலிபர் சடலம் மிதந்தது. அவர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம்,
பல்லாவரம் ரேடியல் சாலையில் குரோம்பேட்டை அருகே பெரிய ஏரியின் தாங்கல் உள்ளது. அந்த ஏரி தண்ணீரில் நேற்று காலை ஆண் சடலம் ஒன்று மிதந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த சடலத்தை மீட்டனர். இறந்து கிடந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவரின் உடைகள் ஏரிக்கரையில் இருந்தன. எனவே மீன் பிடிப்பதற்காக அவர் நீரில் இறங்கிய போது தண்ணீர் மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உடல் அழுகிய நிலையில் உள்ளதால் அவர் இறந்து 2 நாட்களாகி இருக்கலாம் என தெரிகிறது.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story