லாரி கவிழ்ந்து ரூ.2½ லட்சம் முட்டைகள் நாசம் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்


லாரி கவிழ்ந்து ரூ.2½ லட்சம் முட்டைகள் நாசம் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Dec 2017 4:30 AM IST (Updated: 15 Dec 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அருகே லாரி கவிழ்ந்து ரூ.2½ லட்சம் மதிப்புடைய முட்டைகள் உடைந்து நாசமாயின. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாபநாசம்,

தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று ஒரு லாரி முட்டைகளை ஏற்றி சென்று கொண்டிருந் தது. பாபநாசம் அருகே உள்ள கோவில்தேவராயன்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் அருண்குமார், கிளனர்கள் கார்த்திக், மாதவன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 3 பேரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புடைய முட்டைகள் உடைந்து நாச மாயின.

விசாரணை

இதுகுறித்து பாபநாசம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story