நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
பரவலாக மழைநெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம்(15–ந் தேதி) நெல்லையில் பலத்த மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையம், அம்பை ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது.
மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து விடிய, விடிய மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. செங்கோட்டை, மேக்கரை, அடவிநயினார் அணைப்பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. நேற்று காலையில் சாரல் மழை போல் தூறிக்கொண்டே இருந்தது. வள்ளியூர், நெல்லையிலும் நேற்று காலையில் சாரல் மழை போல் மழை தூறியது.
அடவிநயினார் அணைநேற்று காலை 8 மணி நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 135.15 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 142.32 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 113.10 அடியாகவும், கடனாநதி 83 அடியாகவும், ராமநதி 81 அடியாகவும், கருப்பாநதி 67.92 அடியாகவும், குண்டாறு 36.10 அடியாகவும், வடக்குப்பச்சையாறு 48.25 அடியாகவும், நம்பியாறு 20.18 அடியாகவும், கொடுமுடியாறு 37.50 அடியாகவும், அடவிநயினார் 132.22 அடியாகவும் உள்ளன.
அடவிநயினார், குண்டாறு அணைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வருகின்ற தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகின்றன.
மழை நிலவரம்நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம்(மி. மீட்டரில்) வருமாறு:–
பாளையங்கோட்டை–27, நெல்லை–26, ராமநதி–26, பாபநாசம்– 13, சேர்வலாறு–11, அடவிநயினார்–11, குண்டாறு–10, கொடுமுடியாறு–10, மணிமுத்தாறு–9, சேரன்மாதேவி–6, நாங்குநேரி–5, தென்காசி–4, ராதாபுரம்–3, கடனாநதி–2, ஆய்குடி–1.