ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2017 4:30 AM IST (Updated: 17 Dec 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க கோரி நாமக்கல்லில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்,

ஒகி புயலில் சிக்கிய மீனவர்கள் 98 பேரை மத்திய-மாநில அரசுகள் மீட்க கோரி நாமக்கல் பூங்கா சாலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாநில துணை பொதுச் செயலாளர் பொன்.ரமேஷ் தலைமை தாங்கினார். மேற்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் துரைசாமி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை வரவேற்று பேசினார்.

மாநில துணை தலைவர் வடிவேலன் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் கிழக்கு மாநில வன்னியர் சங்க துணை தலவைர் மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ், கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் சுதாகர், வக்கீல் நல்வினை விஸ்வராஜ், ராசிபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய - மாநில அரசுகளை கண்டித்தும், புயலால் கடலில் சிக்கிய மீனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பா.ம.க.வினர் கோஷமிட்டனர். புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். முடிவில் மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் பாலமுரளி நன்றி கூறினார். 

Next Story