மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கிரிவலமும் சென்றனர்.
திருவண்ணாமலை,
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலலேஸ்வரர் கோவிலில் கடந்த 2-ந் தேதி மகாதீபத் திருவிழா முடிந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் தீப சரிசனம் செய்தனர். இதனையடுத்து தெப்பல் உற்சவம் நடந்தது.
இந்த நிலையில் மார்கழி மாதம் நேற்று பிறந்தது. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
உற்சவ மூர்த்திகளுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. சாமிக்கு தங்க கவசமும், அம்மனுக்கு வெள்ளி கவசமும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அம்மன் சன்னதியில் உள்ள நவக்கிரக சன்னதியில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்லத் தொடங்கினர்.
இதனால் திருவண்ணாமலை நகரிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கோவிலில் அம்மன் சன்னதி முன்பு திருப்பாவை, திருவெம்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடந்தது.

Related Tags :
Next Story