மேட்டூரில் மனைவி, 9 மாத ஆண் குழந்தை மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய தொழிலாளி
மேட்டூரில் குடும்பத் தகராறால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி, தனது மனைவி, 9 மாத ஆண் குழந்தை மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர்,
மேட்டூர் கருப்பையா மூப்பனார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 35), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சீதா(27). இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், அடுப்பில் வைக்கப்பட்டு இருந்த கொதிக்கும் சுடுஎண்ணெய் பாத்திரத்தை எடுத்து தனது மனைவி மீது எண்ணெயை ஊற்றினார். இதில் மனைவி சீதாவும், 9 மாத குழந்தையும் சுடுஎண்ணெய் பட்டு காயம் அடைந்தனர். உடனே ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து சீதாவையும், அவரது குழந்தையையும் அக்கம்பக்கத்தினர் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் உடனடியாக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். அங்கு தாய் மற்றும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து ரமேசை தேடி வருகிறார்.

Related Tags :
Next Story