மேலூர் அருகே வடக்கயிறு மஞ்சுவிரட்டு; 7 பேர் காயம்


மேலூர் அருகே வடக்கயிறு மஞ்சுவிரட்டு; 7 பேர் காயம்
x
தினத்தந்தி 18 Dec 2017 4:15 AM IST (Updated: 18 Dec 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே வடக்கயிறு மஞ்சுவிரட்டு; 7 பேர் காயம்

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளளூரை அடுத்துள்ள முருகம்பட்டியில் கிராமத்தினர் சார்பில் வடக்கயிறு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மைதானத்தின் நடுவே ஒரு கல்லில் கயிறு கட்டப்பட்டு, அதில் காளை மாட்டை வடக்கயிற்றால் பூட்டிவிடுவார்கள். வட்ட வடிவில் சுற்றும் கயிற்றுடன் மாடு மைதானத்தில் வலம் வரும். இந்த வகை மஞ்சுவிரட்டில் 25 நிமிடத்துக்குள் 9 மாடுபிடி வீரர்கள் அடங்கிய குழுவினர், வடக்கயிற்றில் கட்டப்பட்ட காளையை பிடிக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளுடன் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 காளைகள் பங்கேற்றன. போட்டியில் மாடுபிடிவீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டி போட்டு மடக்கி பிடித்தனர். இந்த நிகழ்ச்சியில் 7 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். இந்த வடக்கயிறு மஞ்சுவிரட்டை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

Next Story