மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2017 10:00 PM GMT (Updated: 18 Dec 2017 7:48 PM GMT)

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மத்திய–மாநில அரசுகளை கண்டித்து கடமலைக்குண்டு கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடமலைக்குண்டு,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மத்திய–மாநில அரசுகளை கண்டித்து கடமலைக்குண்டு கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தயாளன், மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை வாபஸ் பெற வேண்டும். மீண்டும் உளுந்தம் பருப்பு வினியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஒன்றிய செயலாளர் போஸ் உள்பட விவசாயிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


Next Story