வீட்டுவசதி சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வீட்டுவசதி சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2017 3:15 AM IST (Updated: 19 Dec 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள் விருதுநகரில் உள்ள மண்டல் துணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர்,

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள் விருதுநகரில் உள்ள மண்டல் துணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிளை தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். செயலாளர் வரதராஜன், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வரூப கேசவன் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் அசோகன், சி.ஐ.டி.யூ. கன்வீனர் முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். புதிய கடன் வழங்காதது, வட்டி தள்ளுபடியை உரிய காலத்தில் வழங்காதது போன்றவற்றால் சங்கங்கள் நலிவடைந்து 3 ஆண்டுகளாக உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறியும் ஊதியம் வழங்கிடக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story