எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 7 பேர் மீது வழக்கு


எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Dec 2017 3:15 AM IST (Updated: 19 Dec 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, நாகை மாவட்டத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிதம்பரம் வழியாக சென்றார்.

சிதம்பரம்,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, நாகை மாவட்டத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிதம்பரம் வழியாக சென்றார். அப்போது, சிதம்பரம் புறவழி சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஒன்று திரண்டு, எச்.ராஜாவை கண்டித்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்த புகாரின் பேரில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குமராட்சி ஒன்றிய துணை செயலாளர் சமத்துவவளவன், அன்பு, பாண்டியன், அருள், பாரதி, சுப்பிரமணியன், சுகன் ஆகிய 7 பேர் மீது அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story