மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர்கள் மனு
மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர். தனித்தனியாக வந்து குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி கூட்டத்தில் மனுகொடுப்பதற்காக மாட்டு வண்டி தொழிலாளர்கள் தனித்தனியாக பலர் வந்திருந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் நீண்டவரிசையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருந்தனர்.
மனுக்கள் பதிவதில் தாமதம்
இந்த நிலையில் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் பொதுமக்களோடு மாட்டு வண்டி தொழிலாளர்களும் சேர்ந்து நின்றதால் வரிசை நீண்டது. 300-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் குவிந்ததால் மனுக்கள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து மனுக்களை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கோரிக்கை மனு
அதன்பின் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர். ஒருசிலர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்ல மறுத்து குரல் எழுப்பினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மாட்டு வண்டி தொழிலாளர்கள் தனித்தனியாக கொடுத்த மனுவில் அனைத்திலும் ஒரே கோரிக்கை எழுதப்பட்டிருந்தது. அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
அரசு அனுமதித்துள்ளவாறு பொதுப்பணித்துறையில் உரிய கட்டணம் செலுத்தி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்து உள்ளூர் தேவைகளுக்கு வினியோகிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயில் எங்களது வாழ்வாதாரம் உள்ளது. நீர்வளம், சுற்றுச்சூழலை பாதுகாக்க மணல் குவாரிகளை 6 மாத காலத்திற்குள் மூடிவிட தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் குவாரிகளை மூடும் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு
பாரம்பரியமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளப்பட்டு வருவது குறித்து நீதிமன்ற உத்தரவில் எதுவும் குறிப்பிடாத நிலையில் குவாரிகளை தடை செய்த போக்கில், காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ளி வந்த மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கும் சேர்த்து தடை விதித்திருப்பதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தையும், மாடுகளையும் பாதுகாக்க மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல் கூட்டத்தில் மூக்கணாங்குறிச்சி அருகே தம்மநாயக்கன்பட்டி பகுதியில் கல்லுக்கடை காலனி பொதுமக்கள் குடிநீர், சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி மனு கொடுத்தனர்.
அணுகுசாலை வசதி
கரூர் நாடக நடிகர் சங்க பணத்தை முறைகேடு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நிர்வாகிகள் சிலர் மனு அளித்தனர். கிருஷ்ணராயபுரம் அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தங்கள் கிராமத்தில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முனியப்பன் கோவில் அருகே பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் வேன்கள், விவசாய நிலங்களுக்கு வாகனங்கள் சென்று வர அணுகுசாலை அமைத்து தர வேண்டும் என கூறியிருந்தனர். வேடிச்சிபாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமிக்கு வழங்க வேண்டிய சம்பள தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி அவரது கணவர் சிவபிரகாசம் கொடுத்த மனுவில் கூறியிருந்தார்.
கூடுதலாக ஆசிரியர்கள் நியமித்தல்
அய்யர்மலை சிவாயம் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மேலாண்மை குழுவினர், பொதுமக்கள் சார்பில் அளிக் கப்பட்ட மனுவில், அந்த பள்ளிக்கு கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முல்லையரசு கொடுத்த மனுவில், ஏமூர் ஊராட்சி நடுப்பாளையத்தில் சேதமடைந்த தொகுப்பு வீடுகளின் மேற்கூரையை சீரமைக்கவும், ஏமூர்- நடுப்பாளையம் இடையே மினி பஸ் இயக்க கோரியும் கூறியிருந்தார். கரூர் வெங்கமேட்டில் தண்ணீர் தொட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாமானிய மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.
பரபரப்பு
மக்கள் உரிமைகள் இயக்கம் மாவட்ட செயலாளர் சின்னதம்பி அளித்த மனுவில், கடவூர் ஊராட்சி ஒன்றியம் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க கோரி தெரிவித்திருந்தார்.
செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் சிலர் கொடுத்த மனுவில், செல்லாண்டி பாளையம்-ராயனூர் வரை பாசன வாய்க்காலை ஆழமாகவும், வாய்க்காலின் அகலத்தை விட அதிகமாக தூர்வாருவதாகவும் அதனை தடுத்து நிறுத்த கோரியும், தோண்டப்பட்ட மண்ணை மர்மநபர்கள் திருடி செல்வதாகவும் அதனை தடுக்க கோரியும் தெரிவித்திருந்தனர்.
இதேபோல் பொதுமக்கள் பலர் கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கோவிந்தராஜ் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்கள் தனித்தனியாக வந்து குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story