ஆம்பூர் அருகே பள்ளி வேனில் சிக்கி 1 வயது ஆண் குழந்தை சாவு


ஆம்பூர் அருகே பள்ளி வேனில் சிக்கி 1 வயது ஆண் குழந்தை சாவு
x
தினத்தந்தி 19 Dec 2017 3:45 AM IST (Updated: 19 Dec 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே பள்ளி வேனில் சிக்கி 1½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே நரியம்பட்டு ராமசந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மகள் ஷாலினி (வயது 3). மேல்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள்.

தினமும் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று மாலை வழக்கம் போல பள்ளி வேனில் வீட்டிற்கு வந்துள்ளார். அக்காவை பார்த்ததும் அவரது தம்பி பவித்திரன் (1½) பள்ளி வேனை நோக்கி ஓடிச் சென்றான்.

அப்போது எதிர்பாராதவிதமாக வேனின் பின்பக்க சக்கரத்தில் பவித்திரன் சிக்கி கொண்டான். இதனை கவனிக்காத டிரைவர் வேனை எடுத்ததில் சக்கரத்தில் சிக்கி கொண்ட குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சல் போட்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story