சி.எஸ்.எம்.டி. அருகே ஓடும் வேனில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு


சி.எஸ்.எம்.டி. அருகே ஓடும் வேனில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Dec 2017 10:00 PM GMT (Updated: 18 Dec 2017 9:42 PM GMT)

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

மும்பை, 

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் நேற்று பகல் ஆம்னி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த வேனில் இருந்து குபு, குபுவென கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து பதறிப்போன டிரைவர் வேனை நடுரோட்டில் நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தார். அடுத்த சில நொடிகளில் அந்த வேன் மள, மளவென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதுபற்றி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடுரோட்டில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story