ஐகோர்ட்டில் தமிழ், வழக்கு மொழியாகுமா?
‘தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’ என்று தமிழின் பெருமையையும், அதன் மீது தமிழர்கள் கொண்ட காதலையும் பாரதிதாசன் பாடினார்.
செம்மொழியான தமிழை அழியாமலும், அதன் புகழ் மங்காமலும் காப்பது நம் தலையாய கடமை. இதற்கு வலு சேர்க்கும் வகையில், ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்ற முழக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஒலித்து வருகிறது. இதற்கு சொல்லப்படும் முக்கிய காரணம் சாதாரண குடிமகனும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விஷயங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.
ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களினால் அந்த கோரிக்கை நிறைவேறாமல் இருந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து ஐகோர்ட்டுகளிலும் ஆங்கிலம் தான் முதன்மையான மொழியாக இருந்து வருகிறது. வழக்குகளை தாக்கல் செய்வது முதல் விவாதங்கள், தீர்ப்பு என அனைத்தும் ஆங்கில மொழியில் தான் இருக்கின்றன. சாதாரண குடிமகன் தனக்கான பிரச்சினையை தானே ஐகோர்ட்டில் எடுத்து வைக்க உரிமை இருக்கின்ற போதிலும் அதற்கு ஆங்கிலம் தடையாக உள்ளது. இதன்காரணமாக சாதாரண குடிமகனின் உரிமை மறுக்கப்படுகிறது.
இதை நமது நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ராம்நாத் கோவிந்த் நன்கு அறிந்து வைத்துள்ளார் என்பதை நினைக்கும்போது பெருமிதமாக உள்ளது. நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி கடைக்கோடி குடிமகனின் நிலையை அறிந்து ஐகோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புகள் அந்த மாநிலத்தில் வசிக்கும் கடைக்கோடி மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அந்தந்த மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்தினார்.
இதன்மூலம், ஐகோர்ட்டில் தமிழ் வழக்கு மொழியாக்கப்பட வேண்டும் என்ற தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டு இருப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், மத்தியபிரதேசம் போன்ற மாநில ஐகோர்ட்டுகளில் அந்தந்த மாநில மொழிகள் வழக்கு மொழியாக இருந்து வருகிறது. அப்படி இருக்கும்போது தமிழுக்கு மட்டும் ஏன் தடை? என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வருகிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 348 பிரிவு 2, அந்தந்த மாநில கவர்னர்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அந்தந்த மாநில மொழிகளை ஐகோர்ட்டில் வழக்கு மொழியாக்கலாம் என்று கூறுகிறது. அந்தந்த மாநில கவர்னர்கள் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்று ஐகோர்ட்டில் அந்தந்த மாநில மொழிகளில் தீர்ப்புகளை எழுத ஒப்புதல் அளிக்கலாம் என்று இந்திய அலுவல் மொழி சட்டம் 1963 பிரிவு 7 கூறுகிறது.
சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் கடந்த 1994-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கீழ்கோர்ட்டுகளிலும் தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என்று சுற்றறிக்கை வெளியிட்டார். கடந்த 2014-ம் ஆண்டு இந்த சுற்றறிக்கையை ரத்து செய்த ஐகோர்ட்டு, கீழ்கோர்ட்டுகளில் தீர்ப்புகள் தமிழில் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்றது. இதன்தொடர்ச்சியாக கீழ்கோர்ட்டில் தீர்ப்புகள் தமிழிலே எழுதப்பட்டு வருகிறது.
ஐகோர்ட்டில் தமிழை பயன்படுத்த போதுமான சட்ட சொற்கள் தமிழில் இல்லை என்ற வாதத்தை ஒருதரப்பினர் அவ்வப்போது கூறி வருகின்றனர். கீழ்கோர்ட்டுகளில் தமிழில் தீர்ப்புகள் எழுத போதிய சட்ட சொற்கள் இருக்கும்போது ஐகோர்ட்டில் என்ன சிக்கல் இருக்கப்போகிறது என்பது தமிழ் ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது.
ஐகோர்ட்டில் தமிழ் வழக்கு மொழியாக்கப்பட வேண்டும் என்று அவ்வப்போது நடத்தப்பட்ட போராட்டங்கள் நிரந்தர தீர்வு ஏற்படாமலே முடிவு பெற்றுள்ளது. இதுபோன்ற போராட்டங்களின் போது தமிழக அரசியல் கட்சியினர் ஆதரவு அளிப்பதும், அதன்பின்பு இதைப்பற்றி பேசாமல் இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
அரசியல் காரணங்களுக்காக அவ்வப்போது கவர்னர், ஜனாதிபதியை சந்திக்கும் தமிழக அரசியல் கட்சியினர் ஐகோர்ட்டில் தமிழ் வழக்கு மொழியாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். கேரளாவில் ஜனாதிபதி ஆற்றிய உரை ஐகோர்ட்டில் தமிழ் வழக்கு மொழியாக வேண்டும் என்ற கோரிக்கைக்கு சாதகமாகவே இருப்பதால், இதற்கு அழுத்தம் கொடுக்க இதுவே சரியான தருணம்.
உரிய அழுத்தம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றினால் செம்மொழியான தமிழ் மொழியின் பெருமை இன்னும் உயரும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
-கல்விளை கதிர்

Related Tags :
Next Story