கிருஷ்ணகிரி அணையில் புதிய ‘ஷட்டர்’ அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியது


கிருஷ்ணகிரி அணையில் புதிய ‘ஷட்டர்’ அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியது
x
தினத்தந்தி 20 Dec 2017 4:15 AM IST (Updated: 20 Dec 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணையில் புதிய ‘ஷட்டர்’ அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகுகளில் முதல் மதகின் ‘ஷட்டர்’ கடந்த மாதம் 29-ந் தேதி உடைந்தது. இதையடுத்து அணையில் இருந்து சுமார் 1.40 டி.எம்.சி. தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அந்த உடைந்த ‘ஷட்டரை’ அகற்றி விட்டு புதிய ‘ஷட்டர்’ பொருத்தும் பணி கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இந்த பணியில் இரவு பகலாக தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக தற்காலிகமாக இரும்பு தகடுகள் இறக்கப்பட்டன. இந்த பணிகளை கலெக்டர் கதிரவன் நேற்று முன்தினம் பார்வையிட்டார். அவ்வாறு இறக்கப்பட்ட தகடுகளுக்கு வெல்டிங் வைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

இந்த பணி இன்னும் ஓரிரு நாளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெல்டிங் பணி நிறைவடைந்த பின், இரும்பு துருப்பிடிக்காமல் இருக்க பெயிண்ட் அடித்து, அது நன்றாக காய்ந்த பிறகு அணையில் தண்ணீர் தேக்கி வைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

தற்போது மதகில் ‘ஷட்டர்’ அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். 

Next Story