திருப்பூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2017 9:45 PM GMT (Updated: 19 Dec 2017 7:38 PM GMT)

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறையின் மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் பாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம சுகாதார துறை மாவட்ட பொருளாளர் ராணி, நெடுஞ்சாலைத்துறை திருப்பூர் கோட்ட பொறுப்பாளர் அம்மாசை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், நீதித்துறையில் அலுவலக உதவியாளர்களை சொந்த வீட்டு வேலைக்கு பணியில் அமர்த்துபவர்களை கண்டித்தும், மனித உரிமை மீறலை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாநில துணை தலைவர் ஞானதம்பி நன்றி கூறினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story