ஈரோட்டில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2017 3:15 AM IST (Updated: 20 Dec 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு,

தமிழ்நாட்டில் ஆட்டோ தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு அனுமதிக்கக்கூடாது. ஆட்டோ கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும். ஈரோடு மாநகரில் ஆட்டோ நிறுத்தங்களை அங்கீகரிக்க வேண்டும். ஆட்டோ டிரைவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ஆர்.மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். சங்க பொதுச்செயலாளர் எஸ்.ஷேக்தாவூத் முன்னிலை வகித்தார். இதில் ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் எம்.லோகநாதன், பொதுச்செயலாளர் பி.சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story