ஆத்தூர் அருகே சத்துணவு அமைப்பாளர் பணி இடைநீக்கம்
ஆத்தூர் அருகே சத்துணவு அமைப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆத்தூர்,
ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடிபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்றுமுன்தினம் மதியம் மாணவர்களுக்கு சத்துணவு நேரம் கழித்து வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கிராமபொதுமக்கள் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தமிழ்செல்வி மற்றும் அதிகாரிகள் தென்னங்குடிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று அங்குள்ள சத்துணவு அமைப்பாளர் நேரு, சமையலர் மற்றும் பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
அமைப்பாளர் பணி இடைநீக்கம்
இந்த விசாரணையில் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் நேரு குறித்த நேரத்தில் பணிக்கு வராமல் இருந்து உள்ளதும், உணவு தயாரிக்க தாமதமாக பொருட்கள் எடுத்து கொடுத்ததும், இதனால் சத்துணவு சமைத்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து சத்துணவு அமைப்பாளர் நேருவை பணி இடைநீக்கம் செய்து ஆணையாளர் தமிழ்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story