சனிபெயர்ச்சியையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
சனிபெயர்ச்சியையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
சேலம்,
சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதுவே ‘சனிப்பெயர்ச்சி விழா’வாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று காலை 10.01 மணிக்கு சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அதையொட்டி உலகம் நன்மை பெறுவதற்காவும், துன்பங்கள் தீருவதற்காகவும் பக்தர்கள் சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினார்கள்.
சனிபெயர்ச்சியையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக சனிபகவானுக்கு நேற்று பால், தயிர், நெய், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 16 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள பிரகாரத்தில் ஏராளமானோர் எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரமனூர் கந்தசாமி கோவில்
சேலம் தாதுபாய்குட்டை பகுதியில் உள்ள ஓம்சக்தி வேம்பரசர் விநாயகர் கோவிலில் சனிபெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையடுத்து சனிபகவானுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் பெரமனூர் கந்தசாமி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு மகா ருத்ரயாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று காலை மகா நவக்கிரக யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆறுபடை முருகன் கோவில்
ஏற்காடு அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் உள்ள யோக சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.
இதேபோல் சேலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சனிபெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Related Tags :
Next Story