பெண்ணின் காதை அறுத்து நகையை திருடி சென்றவருக்கு 4 ஆண்டுகள் சிறை


பெண்ணின் காதை அறுத்து நகையை திருடி சென்றவருக்கு 4 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 20 Dec 2017 3:00 AM IST (Updated: 20 Dec 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே உள்ள அகலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி வருத்தாம்பாள்.

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள அகலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி வருத்தாம்பாள்(வயது 45). இவர் கடந்த 2015–ம் ஆண்டு ஜூலை மாதம் 26–ந்தேதி வீரணாமூரில் இருந்து அகலூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மேல் ஒலக்கூர் புதிய காலனியை சேர்ந்த சுப்பிரமணி மகன் செல்வம்(39) என்பவர் வருத்தாம்பாளை வழிமறித்து கீழே தள்ளினார். மேலும் அவர் காதை அறுத்து காதில் இருந்த 1½ பவன் கம்மலை திருடி சென்றுவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செஞ்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ராஜாராம் நேற்று தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் சுமத்தப்பட்ட செல்வத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி ராஜாராம் தீர்ப்பு அளித்தார். இதையடுத்து செல்வதை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story